Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மன்னாரில் குழு மோதலில் இளம் குடும்பஸ்தர் படுகொலை!

மன்னாரில் குழு மோதலில் இளம் குடும்பஸ்தர் படுகொலை!

0 minutes read

மன்னார், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் இன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் மற்றைய குழு நபர் மீது கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கியுள்ளனர்.

இதன்போது படுகாயமடைந்த குறித்த இளம் குடும்பஸ்தர் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர், அச்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் 25 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், உயிரிழந்தவரின் சடலம் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்குச் சென்ற முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More