செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சுக்குநூறாகின்றது சஜித் கூட்டணி! – ஹரிசன் அதிரடித் தகவல்

சுக்குநூறாகின்றது சஜித் கூட்டணி! – ஹரிசன் அதிரடித் தகவல்

0 minutes read

“சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியில் உள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள் எல்லாம் ரணில் விக்கிரமசிங்கவின் பக்கம் வந்துவிடும்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் தாவியுள்ள முன்னாள் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“எமது ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் தற்போது ஜனாதிபதியாக இருக்கின்றார். அவருக்கான ஆதரவு பெருகி வருகின்றது.

தமிழ் முற்போக்குக் கூட்டணியும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவுள்ளது.

தற்போது சஜித் கூட்டணியில் உள்ளவர்கள் அடுத்த தேர்தலில் ஜனாதிபதியை ஆதரிப்பார்கள்.

ஐக்கிய மக்கள் கூட்டணியில் உள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள் எல்லாம் ரணில் பக்கம் வந்துவிடும்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.