Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொழும்பு விபத்தில் தமிழ் வர்த்தகர் சாவு! – மனைவி படுகாயம்

கொழும்பு விபத்தில் தமிழ் வர்த்தகர் சாவு! – மனைவி படுகாயம்

0 minutes read

கொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழ் வர்த்தகர் ஒருவர் சாவடைந்துள்ளார். அவரின் மனைவி படுகாயமடைந்துள்ளார்.

கொழும்பு, இரத்மலானை பிரதேசத்தில் இன்று காலை 8 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

தனது வர்த்தக நிலையத்துக்கு மனைவியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு குறித்த வர்த்தகர் பயணித்துள்ளார்.

இதன்போது எதிரே வந்த ஹயஸ் வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் குறித்த வர்த்தகர் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார். அவரின் மனைவி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

திருகோணமலையைச் சேர்ந்தவரும் இரத்மலானையில் வசிப்பவருமான பாரதிராஜா முகுந்தன் (வயது 44) என்ற வர்த்தகரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

ஹயஸ் வாகனத்தின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More