செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஹோட்டல் அறைக்குள் யுவதியின் சடலம்! – இளைஞர் உட்பட இருவர் கைது

ஹோட்டல் அறைக்குள் யுவதியின் சடலம்! – இளைஞர் உட்பட இருவர் கைது

1 minutes read

ஹோட்டல் அறைக்குள் மர்மமாக உயிரிழந்த யுவதி ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இறக்குவானை – மாதம்பை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றிலேயே நேற்று மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று இறக்குவானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

இறக்குவானையைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவரும், இறக்குவானையைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவரும் ஹோட்டல் அறைக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த யுவதியை அறைக்குள் விட்டு, குறித்த இளைஞர் வெளியில் சென்று மீண்டும் ஹோட்டல் அறைக்குத் திரும்பியுள்ளார்.

இவ்வாறு மீண்டும் இளைஞர் அறைக்கு வருகை தரும் போது, அறை உள்பக்கமாக மூடப்பட்டுள்ளது.

அறையைத் திறப்பதற்கு குறித்த இளைஞர் முயற்சி செய்துள்ளார். எனினும், அறையைத் திறக்க முடியாததை அடுத்து, குறித்த இளைஞர் ஹோட்டல் நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளார்.

இதையடுத்து, ஹோட்டல் ஊழியர் ஒருவரின் உதவியுடன் யன்னல் வழியாகப் பார்த்த போது, யுவதி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இந்தநிலையில், யன்னல் வழியாக உள்ளே சென்ற இளைஞர், யுவதியை மீட்டு கஹவத்தை வைத்தியசாலையில் சேர்த்துள்ளார். எனினும், யுவதி ஏற்கனவே உயிரிழந்துள்ளர் என்று வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குறித்த இளைஞர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யுவதி உயிரிழந்தமைக்கான காரணத்தைக் கண்டறியும் வகையிலான விசாரணைகளை இறக்குவானை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More