செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொழும்பு விபத்தில் மன்னார் இளைஞர் மரணம்!

கொழும்பு விபத்தில் மன்னார் இளைஞர் மரணம்!

0 minutes read

கொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.இரத்மலானையில் கார் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது காரைச் செலுத்திச் சென்ற 28 வயதுடைய செல்வராசா கஜேந்திரன் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார்.

மன்னாரைச் சேர்ந்த குறித்த இளைஞர், பெற்றோருடன் தெஹிவளையில் வசித்து வந்தார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

காரில் அவர் மாத்திரமே பயணித்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாரவூர்தியின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.