செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை “13” குறித்த முன்மொழிவுகளை முன்வைக்குமாறு எழுத்து மூலம் அறிவிப்பு!

“13” குறித்த முன்மொழிவுகளை முன்வைக்குமாறு எழுத்து மூலம் அறிவிப்பு!

0 minutes read

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னதாக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் பரிந்துரைகளையும் முன்மொழிவுகளையும் பெற்றுத்தருமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கட்சிகள் மற்றும் குழுக்களின் தலைவர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் கடந்த மாதம் 26ஆம் திகதியன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கூட்டப்பட்டிருந்த சர்வகட்சி மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களுக்கு அமைவாக ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் மேற்படி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறும் சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி செயலகம் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More