அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மதுசான் சந்ரஜித் உள்ளிட்ட 10 பேருக்குக் கொழும்பு கோட்டை பிரதேசத்தின் பல இடங்களுக்குள் உட்பிரவேசிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் இன்று முன்னெடுக்கப்படும் போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் எனப் பொலிஸாரால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், நிதி அமைச்சு, காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகை உள்ளிட்ட இடங்களுக்குள் உட்பிரவேசிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அமைதியான முறையில் போராட்டங்களை நடத்த முடியும் என்று கோட்டை நீதிவான் தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவை மீறும் போராட்டக்காரர்களைக் கைது செய்வதற்குப் பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது என்றும் நீதிவான் குறிப்பிட்டார்.