மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார் வீதியிலுள்ள மதகு ஒன்றின் கீழிருந்து அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (10) மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பார் வீதி, உப்போடை சந்தியை அண்மித்த பகுதியிலுள்ள மதகின் கீழ் சடலம் ஒன்று இருப்பதை இன்று காலை கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்குத் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.