செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

1 minutes read

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து நவம்பர்  மாதம் 12  ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 19 இலட்சத்து 72 ஆயிரத்து 957 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 443,622 ஆகும்.

அத்துடன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 180,592 சுற்றுலாப் பயணிகளும்,  ரஷ்யாவிலிருற்து 144,308 சுற்றுலாப் பயணிகளும்,  சீனாவிலிருந்து 115,400 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 123,053 சுற்றுலாப் பயணிகளும்,  பிரான்ஸிலிருந்து 96,818 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 88,616 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு  வருகை தந்துள்ளனர்.

அதன்படி, இவ்வாண்டின் நவம்பர் மாதத்தின் முதல் 12 நாட்களில் 82,270 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.