செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 14 சாரதிகள் கைது!

மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 14 சாரதிகள் கைது!

0 minutes read

பொலிஸ் மாஅதிபரின் பணிப்புரைக்கு அமைய, நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (18) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 14  சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பின் போது 30356 பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் 31 பேரும், சந்தேகத்தின் பேரில் 566 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 299 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 172 பேரும், கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 19 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 4162 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.