செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரசாங்க அலட்சியத்தால் அதிகரித்த பாதிப்புகள் | மகிந்த அணியின் தலதா அதுகோரல

அரசாங்க அலட்சியத்தால் அதிகரித்த பாதிப்புகள் | மகிந்த அணியின் தலதா அதுகோரல

1 minutes read

நிலவும் சீரற்ற காலநிலை குறித்து காலநிலை அவதானிப்பு மத்திய நிலையம் முன்கூட்டியதாகவே எதிர்வு கூறியுள்ளது. இந்த எதிர்வுகூறலை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் அனர்த்த முகாமைத்துவத்துக்கான முன் ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் பாதிப்புக்களையும், உயிரிழப்புக்களையும் குறைத்துக் கொண்டிருக்கலாம். இவ்விடயத்தில் அரசாங்கம் அலட்சியமாக செயற்பட்டுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அதுகோரல குற்றஞ்சாட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சி காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாடு என்ற ரீதியில் இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ள வேண்டும்.இயற்கை அனர்த்தத்தை எவராலும் தடுக்க  முடியாது. ஆனால் சிறந்த திட்டமிடல்களால் அனர்த்தத்தால் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்துக் கொள்ளலாம்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட உயிர் மற்றும் சொத்து இழப்புக்குள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அனர்த்த முகாமைத்துவத்துக்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவோம். மக்கள் விடுதலை முன்னணியை போன்று அழிவுக்கு மத்தியிலும் அரசியல் செய்யும் கொள்கை ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடையாது.

நிலவும் சீரற்ற காலநிலை குறித்து காலநிலை அவதானிப்பு மத்திய நிலையம் முன்கூட்டியதாகவே எதிர்வு கூறியுள்ளது. இந்த எதிர்வுகூறலை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் அனர்த்த முகாமைத்துவத்துக்கான முன் ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் பாதிப்புக்களையும், உயிரிழப்புக்களையும் குறைத்துக் கொண்டிருக்கலாம்.

அனர்த்த முகாமைத்துவ முன் ஆயத்த நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை. வெள்ள அனர்த்தத்தின் போது அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் ஒருவர் முகப்பு புத்தகத்தின் ஊடாக நேரலை வந்து ‘படகு இருந்தால் தாருங்கள்’ என்று குறிப்பிடுகிறார்.இவ்வாறு தான் இவர்களின் முன் ஆயத்த நடவடிக்கைகள் காணப்படுகிறது.

அனர்த்த நிலைமையின் போது அச்சமின்றி செயற்படுவதற்கு அரச ஊழியர்கள் தயங்குகிறார்கள். அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு மற்றும் அரச நிர்வாக அமைச்சு ஆலோசனை வழங்கும் வரையில் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மாவட்ட மற்றும் பிரதேச செயலக பிரிவுகள் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய செயற்படலாம்.ஆனால் இந்த அரசாங்கம் அனைத்திலும் குறை கண்டுப்பிடிப்பதால் அரச அதிகாரிகள் விரைவாக செயற்படுவதற்கு தயங்குகிறார்கள்.

நெருக்கடியான சூழ்நிலையில் அச்சமின்றி செயற்படுவதற்குரிய சூழலை அரச அதிகாரிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.நாடு தற்போது எதிர்கொண்டுள்ள இக்கட்டான நிலையில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.