செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை குச்சவெளியில் பெண்ணின் சடலம் மீட்பு!

குச்சவெளியில் பெண்ணின் சடலம் மீட்பு!

0 minutes read

திருகோணமலை,குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சலப்பையாறு பகுதியின் திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதியோரத்தில் இருந்து  இன்று வெள்ளிக்கிழமை (12) காலை பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் 56 வயதுடைய பெண் ஆவார்.

இவர் வியாழக்கிழமை (11) இரவு அயலில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக தனது வீட்டவர்களிடம் கூறி விட்டு வெளியே சென்றதாக அவரது பிள்ளைகள் கூறியுள்ளனர்.

மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. எனினும் இது ஒரு விபத்தாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More