செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சுகாதாரத் துறையினரின் கொடுப்பனவு குறைப்பு | கலந்துரையாட ஜனாதிபதியிடம் கோரிக்கை

சுகாதாரத் துறையினரின் கொடுப்பனவு குறைப்பு | கலந்துரையாட ஜனாதிபதியிடம் கோரிக்கை

1 minutes read

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள மூன்றாவது வரவு செலவுத் திட்டத்தின் (2027) ஊடாக சுகாதாரத் துறையினர் எதிர்கொண்டுள்ள கொடுப்பனவு  குறைப்ப மற்றும் நிதி நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அழைப்பு விடுக்குமாறு கோரி, நிறைவுகாண் மருத்துவ மற்றும் துணை மருத்துவ சேவைகள் ஒன்றிணைந்த சம்மேளனம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக சுகாதார சேவையை இலக்கு வைத்து நேரடியாக கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டதோடு, 2027 வரவு செலவுத் திட்டத்திலும் அதற்குரிய தீர்வுகள் வழங்கப்படாமையால் நெறுக்கடிகள்  உருவாக்கப்பட்டுள்ளதாக  சுகாதார துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆகையால் 24 மணிநேரமும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் சுகாதார ஊழியர்களுக்காக 2027 வரவு செலவுத் திட்டத்தை திருத்தங்களை கொண்டுவருமாறு வலியுறுத்தி மூன்று பிரதான கோரிக்கைகளை  குறித்த சம்மேளனம் முன்வைத்துள்ளது.

இதன்படி, 2025 வரவு செலவுத் திட்டத்தில் நிறுத்தப்பட்ட அடிப்படைச் சம்பளத்தில் 1/20 பங்கான வார இறுதி மற்றும் விடுமுறை தினக் கொடுப்பனவுகளையும், 1/160 பங்கான மேலதிக நேரச் சேவைக் கொடுப்பனவுகளையும் உடனடியாக மீள நிறுவுதல், சுகாதார மற்றும் நிதி அமைச்சுக்களின் தொழில்நுட்ப அறிக்கைக்கு அமைய டெட் கொடுப்பனவிற்கு ஏற்ப விசேட கடமைக் கொடுப்பனவை அதிகரித்தல் மற்றும் வாழ்க்கைச் செலவிற்கு ஏற்ப சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்படும் வரை 25,000 ரூபா இடைக்காலக் கொடுப்பனவை வழங்குதல் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கோரிக்கைகளை எதிர்க்கட்சியின் தேவையாகக் கருதி அரசாங்கம் நிராகரிக்கமாயின் சுகாதார ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க நேரிடும் என அச்சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.

குறித்த கூட்டுச் சம்மேளனத்தில் அரச மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானிகள், அரச கதிரியக்கத் தொழில்நுட்பவியலாளர்கள் , மருந்தாளுநர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பேச்சு சிகிச்சையாளர்கள் மற்றும் பட்டதாரிகள் ஒன்றியம்  என சுமார் 16 சுகாதார துறையை சேர்ந்த வெவ்வேறு   தொழிற்சங்கங்கள் இணைந்து மேற்படி கடிதத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.