செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா உலக சுகாதார நிறுவனத்திற்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்….

உலக சுகாதார நிறுவனத்திற்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்….

0 minutes read

கொரோனா தொற்று விவகாரத்தில் WHO எனப்படும் உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக இருப்பதாக குற்றம்சாட்டி உள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அதற்கு வழங்கப்படும் நிதியை ரத்து செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்த மிரட்டலை விடுத்த அவர், கொரோனா வைரஸ் குறித்து பல தகவல்கள் முன்னரே வெளியானாலும் அவற்றை எல்லாம் உலக சுகாதார நிறுவனம் அலட்சியப்படுத்தி விட்டதாக கூறினார்.

சீனா மீது பயணத் தடை விதிக்க வேண்டும் என தாம் கூறிய போது அதை ஏற்காமல் உலக சுகாதார நிறுவனம் பெரிய தவறிழைத்து விட்டது என்பதும் டிரம்பின் குற்றச்சாட்டு.

டிரம்பின் குற்றச்சாட்டை உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் Dr. Tedros Adhanom Ghebreyesus’ மறுத்துள்ளார். சர்வதேச அமைப்பான WHO சீனாவின் கைப்பொம்மையாக மாறிவிட்டது என டிரம்ப் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.