செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு நியூஸிலாந்தை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது இந்தியா

நியூஸிலாந்தை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது இந்தியா

1 minutes read

சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோகித் ஷ்ரமா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி ஜெய்ப்பூரில் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி-20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. 

முதலாவதாக நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் ஆட்டம் நேற்றிரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா களத்தடுப்பை தேர்வுசெய்ய, நியூஸிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடியது.

மார்ட்டின் கப்டில் (70) மற்றும் மார்க் சாப்மேன் (63) ஆகியோர் அதிகபடியான ஓட்டங்களுடன் நியூசிலாந்து 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு  164 ஓட்டங்களை குவித்தது.

Image

165 ஓட்டம் என்ற இலக்கினை துரத்திய இந்திய அணியினர் இரண்டு பந்துகள் மீதமிருந்த நிலையில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை கடந்தனர்.

அணி சார்பில் அதிகபடியாக ரோகித் சர்மா 40 பந்துகளில் 62 ஓட்டங்களையும், சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 48 ஓட்டங்களையும் குவித்து வெற்றிக்கி வித்திட்டனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா டி-20 தொடரில் 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்க, இரண்டாவது ஆட்டம் நாளை ரஞ்சியில் ஆரம்பமாகவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.