செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு ஆஷஸ்: எதிர்பார்ப்பு மிக்க அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி விபரம் அறிவிப்பு: கவாஜாவுக்கு வாய்ப்பு!

ஆஷஸ்: எதிர்பார்ப்பு மிக்க அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி விபரம் அறிவிப்பு: கவாஜாவுக்கு வாய்ப்பு!

1 minutes read

கிரிக்கெட் உலகின் போர் என வர்ணிக்கப்படும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின், முதல் இரு போட்டிகளுக்கான, எதிர்பார்ப்பு மிக்க அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்ட் போட்டியில் இடம்பெறாத உஸ்மான் கவாஜா, பெயரிடப்பட்டுள்ளார்.

தேர்வாளர்கள் டேவிட் வோர்னரின் ஆரம்ப ஜோடியாக மார்கஸ் ஹரிஸைத் தேர்ந்தெடுக்கும் அதே வேளையில், நாதன் லியோனின் மாற்றீடு வீரராக லெக்ஸ் ஸ்பின்னர் மிட்செல் ஸ்வெப்சனை பெயரிட்டுள்ளனர்.

சரி அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,

டிம் பெய்ன் தலைமையிலான அணியில், பெட் கம்மின்ஸ், கேமரூன் கிரீன், மார்கஸ் ஹரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், மைக்கேல் நெசர், ஜே ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வோர்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர், எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.