செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா குடியரசு தின நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் விருப்பத்துக்குரிய பாடல் நீக்கம்!

குடியரசு தின நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் விருப்பத்துக்குரிய பாடல் நீக்கம்!

1 minutes read

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் திகதி முதல் 4 நாட்களுக்கு குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெறும். இதன்போது, நாடு முழுவதிலும் இருந்து பாதுகாப்புப் படைகள் டெல்லிக்கு வருவது வழக்கம்.

அதன்பின்னர், ஜனவரி 29ஆம் திகதி குடியரசு தின கொண்டாட்டங்கள் நிறைவடையும் நாளில், முப்படைகளின் தலைவரான குடியரசுத் தலைவர், டெல்லிக்கு வந்திருந்த பாதுகாப்பு படைகளை மீண்டும் தங்கள் முகாம்களுக்கு திருப்பி அனுப்பி வைப்பாா். இந்த நிகழ்ச்சி பாதுகாப்புப் படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் மகாத்மா காந்திக்கு விருப்பமான ‘என்னுடன் இருங்கள்’ என்ற பாடல் இசைக்கப்படுவது வழக்கம். பித்தானிய நாட்டை சேர்ந்த ஹென்றி பிரான்சிஸ் லைட் என்ற கவிஞரால் 1847-ம் ஆண்டு எழுதப்பட்ட இந்த கிறிஸ்தவ பாடல், 1950-ம் ஆண்டு முதலே குடியரசு தின நிகழ்ச்சியில் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையிலேயே, இந்த ஆண்டு பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சியிலிருந்து அந்தப்பாடல் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக கவிஞா் முகமது இக்பால் எழுதிய ‘சாரே ஜஹான் சே அச்சா ‘ (ஒட்டுமொத்த உலகத்தையும் விட இந்தியா மேலானது) என்ற பாடல் இசைக்கப்படவுள்ளதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.