4

காலையில் அரும்பி
ஒவ்வொரு நாளும் புதுப்பிக்க
பூவாய் மலர்ந்து
தேனாய் இனிக்கும்
சிலநாள் விடுபட
சிவந்து சினமேற
விலகல் தீயில்
வெந்து கருகி
வெறுப்புத் துருப்பிடித்து
வீணாய்ப் போகும்
ஆதலினால்
காதல் செய்வீர்
அனுதினமும்
அனுதினமும்

சத்யபிரபா