செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் நான் ஒரு சுதந்திரப் பறவை! | தியா

நான் ஒரு சுதந்திரப் பறவை! | தியா

0 minutes read

விசித்திரமான நிகழ்வுகள் நிறைந்த
வாழ்க்கையில் வரலாறு முக்கியமானது.
அது என்னை விட என்னை அதிகம் அறிந்தது.

துயரங்களைக் கடக்க,
கடினமான நாட்களில் காலத்தைக் கழிக்க,
வலி நிறைந்த அத்தருணங்களை எதிர்கொள்ள,
இன்னும் என்னென்னமோ கற்றுத் தந்தது.

காலப் பெருவெளியில் சிக்கி நான்,
சுழலில் சிதைந்த பந்துபோல்
பேரழிவுகளுக்கிடையில் அலைந்தேன்.

பெருங்கடலின் ஆழத்தில்,
தொலைந்து போன,
ஒரு பேய்க் கப்பலானேன்.

சில சமயங்களில் நான்,
மென்மையான நித்திய ஒளியில்,
என் உயரிய நேரத்தை இழந்தேன்.

இன்னும் சில நேரம்,
கனவுகள் பிடிப்பவர்களின்
கைகளில் நான் அடைபட்டிருந்தேன்.

காலம் என்னைக் கட்டவிழ்த்து விட்டபின்,
என் கைகளை நீட்டி,
நான் சுதந்திரமாக பறந்தபோதுதான்,
நான் உணர்ந்தேன்,
என்னாலும் பறக்க முடியும் என்று,
நான் ஒரு சுதந்திரப் பறவை!

-தியா-

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.