செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் மடந்தை | முல்லையின் ஹர்வி

மடந்தை | முல்லையின் ஹர்வி

1 minutes read

உலகளந்த நாள் முதல்
உனக்கென தனி நாள் இல்லை
நித்தமது உன் நாள் தான்

உரிமை அனைத்தும் உனகிருக்கு
தருவார் பெறுவாய் என்றிருந்தால் தலைமழித்தும்
பயனில்லை
தேவையானதை எடுத்துக்
கொள்..
தனியுரிமை பேசி
எவர் வருவர் பார்க்கலாம்.

கண்டது கேட்டு கொண்டதைப் பெருக்கி
புறம் கூறு யாத்திரிகர் நிதம் தொடர்வர் உன் பின்
புன்னகை பரிசளி போதும், மறு மொழி வேண்டாம்.

கல்வியும் கற்பும் காத்திட கொள்
போனபின் புலம்பிப் பயன் இல்லை

மென்மையாக உன் மனதை வைத்திரு
உடல் கரடு முரடாக இருக்கட்டும்
புது உயிர் பிரசவிக்கும் உனக்கு இயலாத வேலை இவளுக்கென்று ஒதுக்க மாட்டார்கள்

அச்சம் அது விலக்கு
ஆசைகளை அவ்வப்போது நிறைவு செய்
மனம் கனத்தால்
உலகிற்கு உன்னால் உதவ இயலாது..

பறக்கும் காலுக்கும்
சிறகு மேனிக்கும்
ஓய்வு ஒதுக்கு..
கணவனும் பிள்ளைகளையும்
காலம் ஏற காத்தாக வேண்டும் நீ..

முன் வந்து பேசில் முடக்குவர் துணிந்து நீ இருந்தால் தூசியும்
துளிர் விட அஞ்சும்

உண்டென்றால் சுதந்திரம் உனக்கு
மேனி வலி மேவி நித்தம் நீ உழைக்கவேண்டும்..
உழைத்திட வேணும் கேள் உழைப்பென்று இல்லாவிடில்
உழுவார் உன் மேனி நிலம் இவ்வுலகத்தார்…

மகளீர் எனும்
பெருமிதமாய்
முல்லையின் ஹர்வி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.