திசை மாறும் பொழுதுகளும்
பொற்காலமாய் மாறுவதுண்டு
எதிர்ப்படா சிந்தனைகளும்
சீர்தூக்கும் நாளாக மாறும்
இன்னல்களும் இடைவுறா
நேசம் தரும்
முடங்கி போக நினைத்தால்
முட்டாள் என்று எவரும் இல்லை
வருவோர் போவோர் வழித்திருப்ப
நிற்பர் காலங்களும் கடந்து போகும்
நல்வழிதனில் நடப்பது நம்கடமை
நாரதனும் குடைபிடிப்பான்
புத்தி கேட்டிடவும் புறமுதுகு காட்டிடவும்
வரிசையாய் வந்து நிற்பர்
ஒதுக்குவதும் ஒட்டிநிற்பதும் உன் போக்கு
அனுவங்களை அறிந்திடா எவரும்
புத்தித்தீட்டிட புலமை பெற்றவரல்லர்
அனுபவமறிந்து அடங்காதவர் எவருமல்லர்
பூட்டி வைத்த தேகம்தனை அனுபவமெனும்
சாவியிட்டு தூண்டி திறவாதோர் யாருமில்லை
அனுபவம் தரும் நிதானம் யாரும் தருவதில்லை
அவரவர் வாழ்வில் அனைத்து பெற்றதிலும்
விட்டதிலும் ஆறா சோகங்களும் அழியா
சந்தோஷமும் கூடவே உண்டு
தெளிந்தவர் வல்லர் தெளியாதோர் மூடர்
அயலார் கூறும் அறிவுரை விடபட்ட
அனுபவமே சாலச்சிறந்த ஆசான்.
கேசுதன்