தமிழர் சமையலிலும் முக்கிய இடம் வகிக்கிறது. மத்திய கிழக்கை பூர்வீகமாகக் கொண்ட இந்தக் கீரை இன்று உலகின் பல பாகங்களிலும் பயிரிடப்படுகிறது.
முளைக்கீரையில் 80 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இதுதவிர, இரும்புச் சத்து, தாமிரச் சத்து, கல்சியம், பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. எனவே இந்த கீரையை வளரும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.
சீரகத்தை நெய்யில் வறுத்து அதனுடன் முளைக்கீரை,மிளகாய்வற்றல், தண்ணீர் சேர்த்து அவித்து அந்த சாற்றை சாதத்தில் கலந்து சாப்பிட்டால் எல்லா விதமான காய்ச்சல்களும் குணமாகும்.