செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் சிங்கக்கொடியும் பாணும் | த. செல்வா

சிங்கக்கொடியும் பாணும் | த. செல்வா

1 minutes read

பங்கப்பட்டு பழனங்கெட்டு
திங்கள் முகமெனோ சலனப்பட்டு
சாப்பாடின்றி கூப்பாடு போட்டு
பாணின் பிணியாய் வீதிமெவினியோ
இந்த வீண்வாழ்வு காவினியோ

துக்கப்பட்டு துயரப்பட்டு
ஏக்கப்பட்டு தாக்கப்பட்டு
ஏக்கிய ராச்சியந் தன்னில்
பூச்சியத்துள் அடைக்கப்பட்டாயோ
புழுவிலும் இழியனோ நீ

சிங்கம் பட்டு தாமரை மொட்டு
குட்டில் பட்டும் பட்டம் விட்டாய்
சட்டை கிழிய சன்னதங் கொண்டாய்
சிங்கம் தங்கமென்றாய் பங்கம்
வங்கமாச்சே சேத்து வைத்த
சொத்திலில்லை சோத்தில் வைச்சார் கையை அவர் தலையில் வைத்தாய்
நெருப்பை நீயே

வாக்கு ஒன்றைப் போட முன்னர்
விரலின் விசையை திசையறிந்து
போட்டலென்ன பேப்பயலே
பாப்பார் பழகுவார் காப்பார்
வாப்பார் என்று முழங்கினாயே
தூப்பார் அவரல்லோ
போய்ப் பார் வீட்டில் பிள்ளையழும்
மாடு மழும் மழலை விழும்

பெற்றோரை மதிக்காட்டியும் பெற்றோலை மதியென்பாய்
உற்றாரும் உறவினனும் சாமான்
பதுக்கியோர் மட்டுமென்பாய்
பாணொன்றைத் தருவோர்
பாரெல்லாம் தெய்வமென்பாய்
பனடோலைத் தந்தாலே
பல டோஸ் போட்டதென்பாய்
நட்டாற்றில் நாயாய் குரைப்பதே
வழமையென்பாய்
தமிழனை அழித்ததால்
தாகமாய்த் துடிக்கிறாயே

தமிழனில் பூமியில்
அவர் சாமியுடன் வாழ்ந்திருந்தால்
பொருண்மியம் வளர்ந்திருக்கும்
பொங்கி எழாமல் தூங்கிடலாம்

அன்றொரு அரசன்
சோழனாம் பெரியோன்
தெற்காசியாவின் செல்வக் களஞ்சியமாய்
ஆக்கினானாம் தமிழ் நிலத்தை
அவ்வழி வந்தவர்
ஆண்ட தெம்பரம்பரை
எவ்வழி துறையுமென
கண்டுறையும் மினத்தினர்
சொல்லொன்று கேட்காமல்
அழிவுச் சோதியை மூட்டினர்
இன்று அனலென கொழும்பெங்கும்
கொக்கரித்து மாழுது

உக்கிரையனில் உதித்தது
அக்கிரகாரமாம்
கொழும்புவரை நீளுது
பாணில்லா பஞ்சமாம்
பருப்பும் சோறுமாம்
இனியெம் தேசிய உணவாம்
அதுக்குங் கொஞ்ச
உப்பேனோ
சுப்பற்ற வளவாம்

திண்ணையிலிருந்து
தீம்பாலருந்தி
அருந்ததி அரைச்ச கறி
உறியில மணக்கையில்
மீசையிலது முட்ட
நக்கிய நாவின் சுவை
தக்கெனத் தோன்றுது
அச்சுவை நாளது

மரவள்ளிச் சம்பலும்
மடிதந்த தூக்கமும்
மாட்டுவண்டிக் காதலும்
தூக்கமாய் இருக்குமே
துக்கமென யார் சொன்னது

பாக்களைப்பாடிட
ஆக்களே கேட்டிட
மாக்களும் மலர்ந்திட
மலர்ந்த நாள் போயிற்றே

வில்லங்கம் வந்தேனோ
சொல்லங்கம் போனது
தலையங்கமில்லா
தலையேனோ அலைந்தது

ஆர்க்கெடுத்துரைப்பேன்
எதையென்று மொழிவேன்
பூவேனோ அழகென்றாலும்
அழுகின் அதுவும்தான் மணக்குமே

பூவேனோ அழகென்றாலும்
அழுகின் அதுவும் மணக்கும்தானே.

த. செல்வா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.