செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் மக்களின் குமுறல்கள் | பொன் குலேந்திரன்

மக்களின் குமுறல்கள் | பொன் குலேந்திரன்

1 minutes read

இலங்கை தீவின் மக்களின் மனங்கள் ,
விலைவாசிகள் மலை போல் உயர்வால்,
கடல் போல் கொந்தலிக்கிறது .
அரசின் திட்டமில்லா பொருளாதாரம்,
மத்திய வங் கியின் மதியற்ற செயாலால்,
மதிப்பற்று இலங்கையின் பணம் ,
செல்லாக் காசு ஆயிட்டு.
இதனால் மக்களின் குமுறல்கள்.

பொருளாதர வளர்ச்சிக்கு உதவாத,
தேவயற்ற அபிவிருத்தித் திட்டங்கள்.
தீவின் அரசை கடன் மேல் ,
கடன் வாங்க வைத்தது.
சீன அரசு வட்டிய்டன் கடன் கொடுத்து,
சீரழிய வைத்தது சுந்தரத் தீவை.

இனத் துவேச கொள்கையுடன்.
ஆட்சிக்கு வந்த பல அரசுகள்,
இன்று செய்வது என்ன என்று தெரியாது.
தனித்து நின்று உதவி தேடி தவிக்கிறது.
கொளரவம் என்ற தீவின் அகங்காரம்,
ஐ நா சபைடின் சொல் கேட்க தடுக்கிறது .
எத்திசையில் செல்வது என்று,
முடிவு எடுக்க கட்சிகள் மாகாநாடு,
ஒன்று கூடி நடத்த அரசின் முடிவு.
கட்சிகளுக்கிடையே கருத்து வேற்றுமையால்,
மாகாநாடு பிசு பிசுத்து போனது .
குடிக்க பால் இன்றி,
குழந்தைகளின் அழுகைகள் .
விவசாயதுக்கு உரமின்றி விவசாயிகளின் குமுறல்

இந்திய மீனவர்களின் ஊடுறுவல்கள்
வட மாகாண மீனவர்களிடம் குமுறல்கள்.
பரீட்சை எழுத் பேப்பர் இன்றி,
மாணவர்களின் குமுறல்கள் .
பயணிக்க வாகனம் இன்றி ,
பொது மக்களின் குமுறல்கள்
உணவு விலை வாசி உயர்வால்,
குடும்பங்க,ளின் இந்தியாவுக்கு பெயர்வுகள் .
போரில் காணாமல் போன தம் உறவுகளை தேடி
ஈழத் தமிழர்களின் குமுறல்கள்.
ஆர்மியின் காணி ஆக்கிரமிப்பை எதிர்த்து ,
காணி சொந்தக்காரர் களின் குமுறல்கள்.
வாழ்க்கைச் செலவு ஊயர்ந்ததினால்,
சம்பள ஊயர்வு கேட்டு தொழிலாளரின் குமுறல்கள்.
குமுறலில் முடிவு மக்கள் புரட்சியா?
என்பது ஒரு கேள்விக்குறி !

ஆக்கம் : பொன் குலேந்திரன்- கனடா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.