செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் லீ குவான் யூவின் கல்லறைக்குப் பக்கத்தில் ஆறடி நிலமுண்டா? | கிரிஷாந்த்ராஜ்

லீ குவான் யூவின் கல்லறைக்குப் பக்கத்தில் ஆறடி நிலமுண்டா? | கிரிஷாந்த்ராஜ்

0 minutes read

அறுபத்தொன்பது இலட்சமும்
அழுது புலம்பக் காரணம்
அவலட்சண அமெரிக்கராம்;
தாவிய தவளையொன்று
தன் வாயால் கெடுகிறது!

இளைஞர்கள் வரைந்த
சுவரோவியத்தில்
சில தெருநாய்கள்
சிறுநீர் கழிக்கின்றன!

ஆட்சி மாறி மறுநாள்
கழுத்துப்பட்டி அணிந்துவந்த
இ.போ.ச சாரதி
அம்மணத்தை மறைத்தபடி
வரிசையில் காத்திருக்கிறார்!

‘குரங்கின் கையில் பூமாலை’
உதாரணம் நன்குணர்ந்தோம்;
பல இலட்சம் பேரின்
சிங்கப்பூர் கனவும்
பூமாலையானது;
குரங்கிற்குக் கொண்டாட்டம்!

இலங்கை ரூபாவை
அமெரிக்க டொலர்
ஈவிரக்கமின்றி
கதறக் கதற *

வீதி விளக்குகளையும்
அணைக்கச் சொல்லி
கும்மிருட்டில் குடும்பமாக
ஒளிந்துகொள்கின்றன கப்புடாஸ்!

மண்ணெண்ணெய் வரிசையில்
மயங்கிவீழ்ந்து இறந்தவர்களின்
கடைசி ஆசை
ஒரு கோப்பைத் தேநீரோ என்னவோ
யாருக்குத் தெரியும்!

சுற்றுலாப் பேருந்தை நிறுத்தி
பிடுங்கித் தின்னும் பஞ்சமும்
யுக்ரேனைவிட உருக்குலைதலும்
தமிழக செய்தியில் மட்டுமே
சாத்தியமாகட்டும் என்கிறது
சாமானியனின் ஆழ்மனது!

சிங்கப்பூர் நண்பா!
லீ குவான் யூவின்
கல்லறைக்குப் பக்கத்தில்
ஆறடி நிலமுண்டா?
இங்கே ஒரு பிணமுண்டு!

கிரிஷாந்த்ராஜ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.