செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பால்மா விலை மீண்டும் அதிகரிக்கும் அபாயம்

பால்மா விலை மீண்டும் அதிகரிக்கும் அபாயம்

0 minutes read

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில், அடுத்த வாரம் முதல் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் உலக சந்தையில் பால் மாவின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டொலர் நெருக்கடி காரணமாக சில இறக்குமதியாளர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

உச்சம் தொடும் பால்மா விலை! இறுதி அறிவிப்பு வெளியானது – Daily Ceylon

இதனையடுத்து, அடுத்த வாரம் முதல் நாட்டுக்கு வரவிருக்கும் புதிய கையிருப்புக்கள் தொடர்பில் விலை அதிகரிப்பு குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய ஒரு கிலோ பால் மாவின் விலை 1,345 ரூபாவிலிருந்து 1,945 ரூபாவாகவும், 400 கிராம் பால் மாவின் விலை 540 ரூபாவிலிருந்து 800 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.