செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி ஜில் பைடன் உக்ரேனுக்கு திடீர் விஜயம்

அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி ஜில் பைடன் உக்ரேனுக்கு திடீர் விஜயம்

1 minutes read

திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி ஜில் படைன் உக்ரேனுக்கு சென்றார்.

உக்ரேன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 10 வாரங்களை கடந்துள்ளது. உக்ரேன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, பல முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளதாக கூறி வருகிறது.

தற்போது உக்ரேனின் கிழக்கு நகரங்களை குறிவைத்து தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.

ரஷ்யா – உக்ரேன் போரில் உக்ரேனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன.

இத்தகைய சூழலில், திடீர் பயணமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி ஜில் படைன், உக்ரேனுக்கு சென்றுள்ளார்.

உக்ரேனின் உஹோரோடா நகரத்தில், உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலேனே ஜெலன்ஸ்கியை ஜில் பைடன் சந்தித்தார்.

ஒரு சிறிய வகுப்பறையில் இருவரும் நேர் எதிரே அமர்ந்தபடி சிறிது நேரம் பேசினர். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில்,

“ இந்த போர் நிறுத்தப்பட வேண்டியது அவசியம் என்பதை உக்ரேன் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியுள்ளது. இந்த போர் கொடூரமானது. ஐக்கிய நாடுகளின் உறுப்பினர்கள் உக்ரேன் மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்” என்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.