செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் பெட்ரோலிய வாகனம் கவிழ்ந்து கோர விபத்து: 31 பேர் பரிதாப பலி; 21 பேர் காயம்

பெட்ரோலிய வாகனம் கவிழ்ந்து கோர விபத்து: 31 பேர் பரிதாப பலி; 21 பேர் காயம்

1 minutes read

எகிப்தின் தலைநகர் கெய்ரோவைச் சுற்றியுள்ள பிரதான சுற்றுவட்ட வீதியில் பெட்ரோலியப் பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று கவிழ்ந்து தீப்பற்றியதில் குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர். கெய்ரோவை ஒட்டிய கிஸா மாகாணத்தின் அல்-வாராக் பகுதியில் சுரங்கப்பாதைக்கு மேலாகச் சென்றுகொண்டிருந்தபோது> இந்தச் சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பெட்ரோலியப் பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனம் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததை அடுத்து பாரிய தீ பரவியுள்ளது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் நின்றிருந்த கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட சுமார் 27 வாகனங்கள் முற்றிலும் தீக்கிரையாகியுள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினரும் தீயணைப்பு வீரர்களும் போராடித் தீயைக் கட்டுப்படுத்தினர்.

விபத்து இடத்திற்கு மீட்புப் பணிகளுக்காக 39 அம்புலன்ஸ்கள் உடனடியாக ஈடுபடுத்தப்பட்டதாக எகிப்து சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், விபத்தில் கருகி உயிரிழந்தவர்களில் அடையாளம் காண முடியாத உடல்களை அடையாளம் காணும் நோக்கில் டிஎன்ஏ மாதிரிகளைப் பெறுமாறு பொது வழக்கறிஞர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

பெட்ரோலிய வாகனம் கவிழ்ந்ததற்கான துல்லியமான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.