செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஐக்கிய நாடுகளின் பிரதிநிதியை சந்தித்தார் பிரதமர்

ஐக்கிய நாடுகளின் பிரதிநிதியை சந்தித்தார் பிரதமர்

0 minutes read

இலங்கைக்கு உதவுமாறு உலக நாடுகளிடம் ஐநா விடுக்கவுள்ள வேண்டுகோள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கியநாடுகளின் இலங்கைக்கான வதிவிடப்பிரநிதி ஹனா சிங்கர் ஹம்டியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

ஐக்கியநாடுகளின் வதிவிடப்பிரதிநிதியுடன் பிரதமர் நேற்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இலங்கைக்கு உதவிவழங்குமாறு புதன்கிழமை ஐநாவிட உலகநாடுகளிற்கு உத்தியோகபூர்வ வேண்டுகோளை விடுக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கைக்கு போதுமான உணவு மருந்து பொருட்களை வழங்குவதற்காக அடுத்த நான்கு மாதங்களில் 48 மில்லியன் டொலர்களை திரட்டுவது குறித்து ஐநா கவனம் செலுத்தவுள்ளது.

இதனை தவிர உணவு சுகாதார பாதுகாப்பிற்கு 34.5 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ள ஐநா பெண்கள் சிறுவர்கள் சுகாதார தேவைகளிற்காக 8 மில்லியன் டொலர்களையும் உணவு சிறுவர் பாதுகாப்பிற்காக 4.8 மில்லியன் டொலர்களையும் வழங்கவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.