செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற திட்டமிடுகின்றார் கோட்டாபய ராஜபக்ச

அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற திட்டமிடுகின்றார் கோட்டாபய ராஜபக்ச

1 minutes read

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் காரணமாக இலங்கையிலிருந்து தப்பிச்சென்ற முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய மீண்டும் அமெரிக்கா செல்வதற்காக கீரீன்கார்ட்டிற்கு காத்திருக்கின்றார் அங்கு தனது குடும்பத்துடன் வசிப்பதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார் என டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் மனைவி அமெரிக்க பிரஜை என்பதால் முன்னாள் ஜனாதிபதி கிறீன்கார்ட்டிற்கு தகுதியானவர் அமெரிக்காவில் உள்ள கோட்டாபயவின் சட்டத்தரணிகள் கடந்த மாதமே இதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டனர் என விடயங்களை அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது கொழும்பில் உள்ள அவரது சட்டத்தரணிகள் மேலதிக ஆவணங்களை தகவல்களை சமர்ப்பிக்கவேண்டியிருக்கும்.

இதேவேளை தாய்லாந்தில் நவம்பர் மாதம் வரை தங்கியிருக்கும் தனது முன்னையை திட்டத்தை கைவிட்டுவிட்டு முன்னாள் ஜனாதிபதி 25 ம் திகதி இலங்கை திரும்பவுள்ளார்.

பாதுகாப்பு காரணங்களால் தாய்லாந்தில் அவர் எதிர்பார்த்த நடமாட்ட சுதந்திரம் கிட்டாததால் இரண்டு நாட்களிற்கு முன்னர் கோத்தபாய ராஜபக்ச தனது சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசித்து இலங்கை திரும்புவதற்கு தீர்மானித்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களிற்காக அவரை ஹோட்டலி;றகுள்ளேயே தங்கியிருக்குமாறு தாய்லாந்து அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கோட்டாபய இலங்கை திரும்பியதும் அவருக்கு முன்னாள் ஜனாதிபதிக்கான பாதுகாப்பு உட்பட ஏனைய வசதிகளை வழங்குவது குறித்து அமைச்சரவை ஆராயும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.