செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் அமெரிக்க கடற்படை முற்றுகை குறித்து கவலையில்லை; தற்போதைய பொருளாதார நிலையே முக்கியம் – ஈரான்

அமெரிக்க கடற்படை முற்றுகை குறித்து கவலையில்லை; தற்போதைய பொருளாதார நிலையே முக்கியம் – ஈரான்

1 minutes read

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகை தொடர்பில் தாம் கவலைப்படவில்லை என ஈரானின் முதல் துணை ஜனாதிபதி முகமது ரெசா அரெஃப் (Mohammad Reza Aref) இன்று (25) தெரிவித்துள்ளார்.

ஏனைய எல்லைகள் ஊடாக சரக்குப் போக்குவரத்து மற்றும் சுங்க அனுமதி நடவடிக்கைகள் கணிசமாக அதிகரித்துள்ளதால், தெற்கு துறைமுகங்கள் மீதான இந்த முற்றுகை குறித்து ஈரான் அச்சப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நாட்டின் உள்நாட்டுப் பொருளாதார நிலைமை தொடர்பிலேயே அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், முக்கியத்துவம் வாய்ந்த அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு வலுவாக இருப்பதாகவும், நாட்டில் விநியோகம் தாராளமாக உள்ளதாகவும் உறுதியளித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் மூன்று மாதங்களுக்காவது அடிப்படைப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் முகமது ரெசா அரெஃப் மேலும் தெரிவித்துள்ளார்.

சுமார் 9 மாதங்களாக நீடித்து வரும் போர்ச் சூழல் காரணமாக, பல தசாப்தங்களில் இல்லாத மிக மோசமான பணவீக்க எழுச்சிகளில் ஒன்றை ஈரான் தற்போது எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக உணவு மற்றும் குடிபானங்களின் விலைகள் சடுதியாக உயர்ந்துள்ள நிலையில், கடந்த ஜூலை மாதம் ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை மீண்டும் விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க கடற்படை முற்றுகை குறித்து கவலையில்லை; தற்போதைய பொருளாதார நிலையே முக்கியம் - ஈரான்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.