0
எதிர்வரும் டி20 உலகக் கிண்ண போட்டியிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் காயம் காரணமாக, விலகியுள்ளார்.
இது, அடுத்த மாதம் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகும் போட்டியில் இந்தியாவுக்கான மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் எனத் தெரிகிறது.
பும்ராவுக்கு முதுகுப் பகுதி எலும்பில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த 6 மாதங்களுக்கு அவரால் களம் காண முடியாதெனவும் இந்திய கிரிக்கெட் சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.