செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் நாட்டிங்ஹாம் சம்பவத்தில் இந்திய மாணவியும் மரணம்!

நாட்டிங்ஹாம் சம்பவத்தில் இந்திய மாணவியும் மரணம்!

0 minutes read

நாட்டிங்ஹாம் நகரில் கொல்லப்பட்ட மூவரில் இந்திய மாணவி ஒருவரும் உள்ளடங்குகின்றார் என தகவல் வெளியாகியுள்ளது.

கொல்லப்பட்டவர்களில் இருவர் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக மாணவர்கள். இதில் ஒருவர் இந்திய வம்சாவளி மாணவி என்பதுடன், அவரது தந்தை பிரபல வைத்தியர் எனவும், குறித்த இந்திய மாணவி, இங்கிலாந்து அணிக்காக தெரிவான ஹொக்கி விளையாட்டு வீராங்கனை என்பதும் தெரியவந்துள்ளது.

அத்துடன், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 31 வயதுடைய நபர், மேற்கு ஆப்பிரிக்க நாட்டவர் என்றும் சட்டப்பூர்வ அனுமதி பெற்றே அவர் இங்கிலாந்தில் தங்கி வருகிறார் எனவும் தெரியவந்துள்ளது.

அவரிடம் இருந்து கத்தி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி : நாட்டிங்ஹாம் நகரில் வேன் மோதி மூவர் பலி; ஒருவர் கைது

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.