செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ‘சிக்மா’ இசை வெளியீட்டு விழாவில் அப்பா விஜய்க்கு நன்றி கூறிய ஜேசன் சஞ்சய்!

‘சிக்மா’ இசை வெளியீட்டு விழாவில் அப்பா விஜய்க்கு நன்றி கூறிய ஜேசன் சஞ்சய்!

1 minutes read

நடிகரும் தமிழக முதல்வருமான விஜயின் மகனும், இளம் இயக்குநருமான ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னையில் வெள்ளிக்கிழமை (18) நடைபெற்றது.

இந்த விழாவில் உரையாற்றிய அவர்,

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு கட்டத்தில் எடுக்கப்படும் முக்கியமான முடிவு, அவர்களின் வாழ்க்கையையே மாற்றக்கூடும் என்றும், அவ்வாறான ஒரு பயணத்தை மையமாகக்கொண்டதே ‘சிக்மா’ திரைப்படம் என்றும் தெரிவித்தார்.

தனது முதல் திரைப்படம் மிகவும் சிறப்பானதும், மறக்க முடியாததுமான அனுபவமாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தப் பயணத்தில் தன்னுடன் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

அத்துடன், தனது நண்பர்கள், குடும்பத்தினர், தாயார் மற்றும் சகோதரி திவ்யா சாஷாவுக்கும் அவர் நன்றி கூறினார்.

குறிப்பாக தனது தந்தையும் தமிழக முதல்வருமான விஜய்க்கு நன்றி தெரிவித்தார். ஜேசன் சஞ்சய் தனது தந்தை விஜய்க்கு நன்றி தெரிவித்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இதேவேளை, ‘சிக்மா’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.