செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு யசஸ்வி ஜெய்ஸ்வாலின் முதலாவது சதம் – ஒரு தேவதை கதையை பார்த்த அனுபவம்

யசஸ்வி ஜெய்ஸ்வாலின் முதலாவது சதம் – ஒரு தேவதை கதையை பார்த்த அனுபவம்

1 minutes read

தேவதைகதைகள்  தவிர்க்கமுடியாதவை என கருதவேண்டியதில்லை. ஆனால் வியாழக்கிழமை மேற்கிந்திய இந்திய அணிகளுக்கு இடையிலான  டெஸ்டை பார்க்கும்போது அந்த முரண்பாடான வார்த்தைகள் உங்கள் மூளையில் உதித்திருக்கலாம்.

அலிக் ஆதனாசேவின் பந்தை அடித்து ஆடி யசஸ்வி ஜெய்ஸ்வால் 99லிருந்து 100க்கு சென்றார்,அது ஸ்வீப்சொட்டும புல்சொட்டும் சேர்ந்த ஒரு கலவை.

தனது ஹெல்மெட்டை கழற்றி கைகளை உயரத்தூக்கி 18வயது இளைஞனை போல அவர் சிரித்தவேளை அந்த தேவதைகதை மனதுக்குள் தோன்றியது.

இந்த இளைஞன் தனது முதலாவது டெஸ்ட்போட்டியில் விளையாடுகின்றான்  என்ற உண்மை அந்ததருணத்திலேயே மனதில் தோன்றியது.

அதுவரை நீங்கள் ஒரு அனுபவவீரரின் இனிங்சையே பார்த்துக்கொண்டிருந்தீர்கள் – அவர் சதமடிப்பது தவிர்க்க முடியாதது என்பது அவரின் ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தவேளை தோன்றியது.

இந்த சதம் மிகச்சிறப்பானது ஏனென்றால் டொமினிகாவில் சதங்களை அடிப்பது சாத்தியமான விடயம் ஆனால் முதல் டெஸ்டில் அடிப்பது மிகவும் கடினமான விடயம்.

ஆடுகளம் மிகவும் மெதுவானதாக காணப்பட்டது பந்துடேர்னாகியது பவுன்சும் காணப்பட்டது அடித்த பந்துகளும் மெதுவாகவே காணப்பட்டது.

80பந்துகளை எதிர்கொண்ட பின்னரே விராட்கோலி முதலாவது நான்கு ஓட்டங்களை பெற்றார்.

அது அனுபவமிக்க வீரர்களிற்கான சூழ்நிலை.

ஆனால் ஜெய்ஸ்வால் சதத்தை பெறுவது  தவிர்க்க முடியாதது என்ற கருத்து காணப்பட்டது.

பலத்த எதிர்பார்ப்புகளுடனும் அதிகளவு வெற்றிகளுடனும் சர்வதேச அரங்கிற்கு வந்துசேர்ந்த பல வீரர்கள் உள்ளனர்,அவர்கள் தங்கள்  நம்பிக்கையை பூர்த்தி செய்திருக்கலாம் அல்லது  நிறைவேற்ற தவறியிருக்கலாம் ஆனால் அவர்களை ஏனைய வீரர்களிடமிருந்து பிரித்துக்காட்டும் விடயமொன்றுள்ளது.

பட்கமின்சை பொறுத்தவரை  அவர் வேகப்பந்து வீச்சாளருக்கான உடல் உள திறமைகளை கொண்டுள்ளார் என்ற கருத்து காணப்பட்டது,ரோகித் சர்மாவை பொறுத்தவரை 18 வயதிலேயே அவர் தனது சொட்களை விளையாடுவதற்கு ஏனையவீரர்களை விட மேலும் சில செகன்ட்கள் எடுத்துக்கொள்கின்றார் என கருத்து நிலவியது.

ஜெய்ஸ்வாலின் துடுப்பாட்டத்தில் ஒரு மகிழ்ச்சியான இயல்பான தன்மை காணப்பட்டது.

அவர் துடுப்பாட்டத்தின் இயக்கவியலை ஓட்டங்களை குவிப்பது எப்படி என்பது குறித்த உள்ளார்ந்த புரிதல் கொண்டவராகவும் காணப்பட்டார்.

அவரது முதல்தரப்போட்டி சாதனைகளை பார்த்தால் இது புரியும் இந்திய அணிக்காக தனது முதலாவது டெஸ்டை விளையாடும் வரை அவரது சராசரி 80 ஆக காணப்பட்டது. 26 இனிங்ஸ்களில் 11 அரைசதங்களையும் ஒன்பது சதங்களையும் பெற்றிருந்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.