அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா விண்வெளித் துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
அந்தவகையில், தற்போது ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஒரு குழுவை அனுப்ப உள்ளது.
இந்தக் குழுவினர் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு செல்ல உள்ளனர்.
நாசா மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் 7ஆவது குழு இதுவாகும்.
இந்த குழுவில் நாசாவின் ஜாஸ்மின் மொக்பெலி, ஐரோப்பிய விண்வெளி வீரர் ஆண்ட்ரியாஸ் மொகென்சென், ஜப்பானை சேர்ந்த சடோஷி புருகாவா மற்றும் ரஷியாவின் கான்ஸ்டான்டின் போரிசோவ் ஆகிய விண்வெளி வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
இவர்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி தங்களது பணியை தொடங்க உள்ளனர் என நாசா தெரிவித்துள்ளது.