3
ஜார்க்கண்ட் மாநிலத்தின் செராய்கேலா மாவட்டத்தில் இன்று (30) அதிகாலை மும்பை நோக்கிச் சென்ற மும்பை – ஹவுரா பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இதில் ரயிலின் 18 பெட்டிகள் தடம் புரண்டன . விபத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்ததாகவும் 20 பேர் காயம் அடைந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ரயில் விபத்தால் அவ்வழியாக செல்லும் பல ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.