இந்தியா – இமயமலைப் பகுதியில் இன்று (04) இடம்பெற்ற பஸ் விபத்தில் 36 பயணிகள் உயிரிழந்துள்ளனர் என AFP செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்தில் பலர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
காயங்களுக்கு ஆளான மூவர், ஹெலிகாப்டர் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர் என உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அரச அதிகாரி ஒருவர் AFP செய்தியிடம் கூறினார்.
உயிரிழந்த பயணிகளின் குடும்பங்களுக்கு இந்தியாப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
அத்துடன், உயிரிழந்த பயணிகளின் குடும்பங்களுக்கும் காயமடைந்த பயணிகளுக்கும் நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.