ஜெர்மனி – பவாரியா மாநிலத்தில் அமைந்துள்ள அஷாபன்பர்க் நகரில் இன்று வியாழக்கிழமை (23) கத்திக்குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த திடீர் கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் ஒரு குழந்தை, ஒரு பெரியவர் மரணித்துள்ளனர். அத்துடன், பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் உள்ளூர் நேரப்படி காலை 11.45 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதல் நடந்த இடத்தில் ஒருவரை கைதுசெய்த பொலிஸார், வேறு யாருக்கும் இச்சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
கத்திக்குத்து சம்பவத்தை அடுத்து அப்பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
மரணித்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் விவரங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.