செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மின்சாரம் தாக்கி 8 வயது சிறுமி உயிரிழப்பு!

மின்சாரம் தாக்கி 8 வயது சிறுமி உயிரிழப்பு!

0 minutes read

சிறுமி ஒருவர் மின்சாரம் தாக்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் அனுராதபுரம் மாவட்டம், மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கிலிகந்தராவ பகுதியிலுள்ள வீடு ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

மின்சாரம் தாக்கியதையடுத்து மேற்படி சிறுமி மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் 8 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார் என்று மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி சிறுமி தண்ணீரைச் சூடாக்கும் மின்சாரக் கருவியைப் பயன்படுத்தியபோது மின்சாரம் தாக்கியுள்ளது என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.