எரித்திரிய நாட்டில் ஒவ்வொரு ஆணும் ஆகக்குறைந்தது இரு பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிட்டால் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு கடுமையான உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
அந்நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை குறைவாகவும் பெண்கள் அதிகமாகவும் இருப்பதாலேயே அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அந்நாட்டின் மொத்தசனத்தொகை 4மில்லியனாகும்.
1998ஆம் ஆண்டிலிருந்து 2000ஆம் ஆண்டுவரை நடைபெற்ற யுத்தத்தில் ஒரு இலட்சத்து 50ஆயிரம் இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதனால் ஆண்களின் தொகை குறைந்துள்ளது.
இரண்டு பெண்களை திருமணம் செய்யும் ஆண்களுக்கு பண உதவி மற்றும் வீட்டு வசதி என்பனவும் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.