கடலில் மிதக்கும் அணு மின் நிலையத்தை அமைக்கத் திட்டமிட்டு வருவதாக சீனா தெரிவித்தது.
இதுகுறித்து சீன அணுசக்திக் கட்டுப்பாட்டு அமைப்பின் சலைவர் ஜு டாஷே புதன்கிழமை கூறியதாவது:
சீனாவின் அணு மின் உற்பத்தியை வரும் 2020-க்குள் இரண்டு மடங்காக்கத் திட்டமிட்டுள்ளோம். அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கடலில் மிதக்கும் அணு மின் நிலையத்தை உருவாக்க முடிவு செய்துள்ளோம். கடலில் ஆதிக்கம் செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சீனா, கடல் வளத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது என்றார் அவர்.
கடலில் விமானம் தாங்கிக் கப்பல்களிலும், நீர்மூழ்கிக் கப்பல்களிலும் அணுசக்தி நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், பொதுமக்கள் பயன்பட்டுக்காக கடலில் அணுசக்தி உற்பத்தி செய்யப்படுவது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.