0
இதுவரை சமூக வலைத்தளங்களில் கால் பதிக்காமல் இருந்த கமல் ஹாசன், நேற்று ட்விட்டரில் இணைந்தார்.
@ikamalhaasan என்கிற ட்விட்டர் கணக்கில் இணைந்த அவருக்கு மகள் ஸ்ருதி ஹாசன் முதல் வாழ்த்து தெரிவித்தார். ஒரே நாளில் அவருக்கு 30,000 ஃபாலோயர்ஸ் கிடைத்தார்கள்.
இசையமைப்பாளர் இளையராஜா இசையில், தேசிய கீதத்தை கமல்ஹாசனே பாடி பதிவேற்றியுள்ளார். இந்திய விடுதலைப் போராட்டம் இன்றைக்கும் தனித்துவத்துடன் விளங்குகிறது என நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்