செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் போட்டி டெட் குருஸ் வேட்பாளராகஅதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் போட்டி டெட் குருஸ் வேட்பாளராக

அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் போட்டி டெட் குருஸ் வேட்பாளராகஅதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் போட்டி டெட் குருஸ் வேட்பாளராக

1 minutes read

அமெரிக்காவில் ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவு அடைய உள்ள நிலையில், அங்கு நவம்பர் மாதம் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்க உள்ளது.

இதையொட்டி ஆளும் ஜனநாயக கட்சி, எதிர்க்கட்சியான குடியரசு கட்சியில் அதிபர் வேட்பாளராக களம் இறங்க பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க இரு கட்சிகளிலும் விரைவில் உட்கட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.

ஜனநாயக கட்சி தரப்பில் 15 பேர் அதிபர் வேட்பாளராக போட்டியிடுகின்றனர். இதில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்குவதற்கு பலத்த போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலில், ஹில்லரி கிளிண்டன் அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளராகும் வாய்ப்பைவிட, டோனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சி வேட்பாளராகும் வாய்ப்பு அதிகம் என்று கருத்துக்கணிப்புகள் கூறியிருந்தது.

முன்னதாக கடந்த வாரம் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் டொனால்டு டிரம்புக்கு சாதகமாக இருப்பதாகவும், அவருக்கு 34 சதவீதம் பேரின் ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அவருக்கு அடுத்த நிலையில் உள்ள டெட் குருசுக்கு 20 சதவீதம் பேரின் ஆதரவு கிடைக்கும் என்றும் அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டிருந்தது.

அதிபர் தேர்தலுக்கான முதல் கட்டமாக வேட்பாளருக்கான போட்டி அயோவா பகுதியில் நேற்று நடைபெற்றது. இதில், டோனால்ட் டிரம்பை, டெட் குருஸ் தோற்கடித்து அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

இதில் குருஸ் 28 சதவீதம் வாக்குகளையும், டிரம்ப் 24 சதவீதம் வாக்குகளையும் பெற்றனர். அவர்களுக்கு அடுத்த நிலையில், மார்கோ ருபியோ 23 சதவீதம் வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

இதனால் டெட் குரூஸை குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை என்று கருதப்படுகிறது. முன்னதாக முஸ்லீம்கள் அமெரிக்காவில் நுழைவது குறித்து டிரம்ப் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததே அவருடைய இந்த தோல்விக்கு காரணம் என்று கருத்துகள் வெளியாகியுள்ளன. இந்த முடிவுகளை வரவேற்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.

ஜனநாயக கட்சியை பொறுத்தவரை கிளாரி கிளிண்டனும், பெர்னி சண்டெர் இருவரும் கிட்டத்தட்ட சமமான வாக்குகளை பெற்றுள்ளனர். கிளிண்டன் 50.1 சதவீத வாக்குகளையும், பெர்னி 49.3 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர். முன்னதாக கிளாரி கிளிண்டனுக்கு தற்போதைய அதிபர் பராக் ஓபாமா ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.