கரீபியன் கடல் நாடுகளில் ஒன்றான, ஐரோப்பா கண்டத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நெதர்லாந்து நாட்டில், அனுமதியின்றி பறக்கும் ஆளில்லா விமானங்களை பிடித்து, தரைக்கு கொண்டு வரும் பணியில், கழுகுகள் ஈடுபடுத்தப்படுகின்றன.
பிடிக்க முடியும் என்பதால், ‘டிரோன்’ எனப்படும்,ஆளில்லா விமானங்களை பிடிக்கும் பணியில், கழுகுகள் ஈடுபடுத்தப்படுகின்றன. குறைந்த விலையில், எளிதில் கிடைக்கும், பயன்படுத்த மிகவும் எளிதான, ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி, பயங்கரவாதிகளும், சமூக விரோதிகளும் தாக்குதல் நடத்தலாம் என்ற பீதி, பல நாடுகளிலும் உள்ளது.
சிறுவர்கள், புகைப்பட ஆர்வலர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் பொழுதுபோக்காக உள்ள ஆளில்லா விமானங்கள், நெதர்லாந்து நாட்டில் ஏராளமாக பெருகி விட்டன. அதை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அரசு நிர்வாகம், அனுமதியின்றி பறக்க விடப்படும் ஆளில்லா விமானங்களை பிடித்து கொண்டு வரும் பணியில், கழுகுகளை பயன்படுத்துகின்றனஅந்தந்த பகுதி போலீஸ் அலுவலகங்களில், கழுகுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. கழுகுகளும் வானில் பறந்து சென்று, இயந்திர
பறவைகளான ஆளில்லா விமானங்களை, கால்களால் இறுக பற்றிப்பிடித்து, தரைக்கு கொண்டு வருகின்றன. போலீசில் விரைவில், கழுகு படை அமைத்து, அனுமதியின்றி பறக்கும் ஆளில்லா விமானங்களை மடக்கி பிடிக்க, அந்நாட்டு போலீசார் முடிவு செய்துள்ளனர்.