செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று இலங்கை செல்கிறார்மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று இலங்கை செல்கிறார்

மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று இலங்கை செல்கிறார்மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று இலங்கை செல்கிறார்

1 minutes read

மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் 2 நாள் பயணமாக இன்று இலங்கை புறப்பட்டு சென்றார்.

மத்திய வெளியுறவுதுறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இலங்கையில் 2 நாள் பயணம் மேற்கொள்கிறார். அதற்காக இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் கொழும்பு புறப்பட்டு சென்றார்.

கொழும்பில் இன்று நடைபெறும் 9–வது கூட்டுக்குழு கூட்டத்தில் இலங்கை வெளியுறவு துறை மந்திரி மங்கள சமரவீராவுடன் கலந்து கொள்கிறார். அப்போது இருநாடுகளுக்கும் இடையேயான பொருளாதாரம், வர்த்தகம், மின்சாரம், கடல்கள் ஒத்துழைப்பு, சமூக கலாச்சாரம், கல்வி, அறிவியல் தொழில்நுட்பம், ராணுவ ஒத்துழைப்பு, விமான போக்குவரத்து, சுற்றுலா இருநாட்டு மக்களின் தொடர்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது.

இப்பயணத்தின் போது சுஷ்மா சுவராஜ் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பிரதமர் ரனில் விக்ரம் சிங்கே, முன்னாள் அதிபர் சந்திரிகா குமார தூங்கா மற்றும் உயர்மட்ட தலைவர்களை சந்திக்கிறார்.

அப்போது தமிழக மீனவர் பிரச்சினை மற்றும் இலங்கை தமிழர்களின் உரிமைகள் குறித்தும் பேசுகிறார். இத்தகவலை வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விசாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெறும் ‘சங்கம்’ இந்திய விழாவில் ‘ரைஸ் ஆப் டிஜிடல் இந்தியா’ என்ற தொழில் நுட்ப கண்காட்சியை நாளை (6–ந்தேதி) திறந்து வைக்கிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.