ஊடகவிலாளர்கள் சந்திப்பில், சுவீடன் சுகாதார அமைச்சர் எலிசபெத் லான் (Elisabet Lann) திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
சுவீடனின் புதிய சுகாதார அமைச்சராக மேடையில் அறிமுகம் செய்யப்பட்ட சில விநாடிகளில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து, உடனடியாக அவர் அந்த அறையில் இருந்து வெளியே கொண்டுசெல்லப்பட்டார்.
ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு அவர் ஊடகவிலாளர்கள் சந்திப்பிற்குத் திரும்பினார்.
இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததால் மயங்கி விழுந்துவிட்டதாக அவர் கூறினார்.
அவர் மேடையில் விழும் வீடியோ சமூக ஊடகத்தில் பரவலாகப் பகிரப்படுகிறது.
சுவீடனின் முன்னாள் சுகாதார அமைச்சர் பதவி விலகிய பிறகு எலிசபெத் லான் அந்தப் பொறுப்புக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.