உலக நாடுகள் எதிர்ப்பை மீறி உளவு செயற்கை கோளை வடகொரியா விண்ணில் செலுத்திய நிலையில், இது போல் தொடர்ந்து பல செயற்கை கோள்களை விண்ணில் ஏவப்படும் என வடகொரியா தெரிவித்துள்ளது. செயற்கை கோளை ஏவ பயன்படுத்திய ஏவுகணை மூலம் வடகொரியாவில் இருந்தபடி அமெரிக்கா வரை தாக்க முடியும் என்பதால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன.
வட கொரியா உளவு செயற்கை கோளை ஏவியது தொடர்பாக, விவாதிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் நேற்று அவசரமாக கூடியது. இந்த கூட்டத்தில் பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள 15 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டார்கள். இந்த கூட்டத்திற்கு பிறகு வெளியிடப்பட்ட அறிகையில் “ வட கொரியாவின் இந்த நடவடிகையை வன்மையாக கண்டிக்கிறோம். இது மிகவும் ஆபத்தானது மட்டும் அல்ல, தீவிர விதி மீறல்.” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், வட கொரியாவின் மீது புதிதாக பொருளாதார தடைகளை விதிக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.