செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் Meta நிறுவனம் அறிமுகப்படுத்தும் ‘Teen Accounts’ Facebook

Meta நிறுவனம் அறிமுகப்படுத்தும் ‘Teen Accounts’ Facebook

0 minutes read

Meta நிறுவனம் பதின்ம வயதினருக்கான ‘Teen Accounts’ எனப்படும் கூடுதல் பாதுகாப்புக் கட்டமைப்புகள்கொண்ட Facebook கணக்குகளை உலகெங்கும் அறிமுகப்படுத்தியுள்ளது.

Facebook மற்றும் Messenger செயலிகளைப் பயன்படுத்தும் 13 வயது முதல் 17 வயதுடைய பதின்ம வயதினரின் கணக்குகளை இந்த ‘Teen Accounts’இல் வகைப்படுத்தியுள்ளதாக Meta நிறுவனம் தெரிவித்தது.

கடந்த ஆண்டு Instagramஇல் பதின்ம வயதினரைத் தகாத உள்ளடக்கங்களிலிருந்து பாதுகாக்க ‘Teen Accounts’ அறிமுகம் கண்டன.

பின்னர் இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் அந்தத் திட்டம் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் Facebook மற்றும் Messenger செயலிகளிலும் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய வகைக் கணக்குகள் வழியாகப் பிள்ளைகள் Facebook மற்றும் Instagram செயலிகளைப் பயன்படுத்தும் நேரத்தையும் முறையையும் பெற்றோர் கட்டுப்படுத்த முடியும்.

16 வயதுக்குக் குறைந்தோர் அந்தக் கட்டுப்பாடுகளைப் பெற்றோர் அனுமதியின்றி அகற்றமுடியாது என்றும் Meta நிறுவனம் தெரிவித்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.