செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தமிழ் மக்களின் கவலைகளை இலங்கை அரசிடம் எடுத்துக் கூறுவேன் | ஸீத் ராத் அல் ஹுசைன்தமிழ் மக்களின் கவலைகளை இலங்கை அரசிடம் எடுத்துக் கூறுவேன் | ஸீத் ராத் அல் ஹுசைன்

தமிழ் மக்களின் கவலைகளை இலங்கை அரசிடம் எடுத்துக் கூறுவேன் | ஸீத் ராத் அல் ஹுசைன்தமிழ் மக்களின் கவலைகளை இலங்கை அரசிடம் எடுத்துக் கூறுவேன் | ஸீத் ராத் அல் ஹுசைன்

1 minutes read

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் ஸீத் ராத் அல் ஹுசைன் 4 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார்.
இலங்கையின் வடபகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற அவர், யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்துப் பேசினார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் அல் ஹுசைன் கூறியதாவது:
இலங்கையில் இறுதிக் கட்டப் போரின்போது காணாமல் போனவர்கள், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்களின் நிலை குறித்து மேலும் தகவல்களைப் பெறுவது, வடக்குப் பகுதியில் மக்களுக்கு உள்ள பிரச்னைகளைத் தீர்ப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், சில தமிழத் தலைவர்களை சந்தித்துப் பேச இருக்கிறேன் என்றார் அவர்.
இந்த சந்திப்பு குறித்து வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கூறுகையில், “அல் ஹுசைனின் வருகையால் வடக்குப் பகுதி மக்களுக்கு அரசியல் கைதிகள் தொடர்பாக புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் கவலைகளை இலங்கை அரசிடம் எடுத்துக் கூறுவேன் என்று அவர் உறுதியளித்துள்ளார்’ என்றார்.
வடக்கு மாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பலிஹக்காராவையும் அல் ஹுசைன் சந்தித்துப் பேசினார்.
இதற்கு முன்பு ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்த நவி பிள்ளை அளித்த அறிக்கையில் இலங்கை அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். “போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அரசு நீதி வழங்கவில்லை’ என்று அந்த அறிக்கையில் அவர் கூறியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.